மத்திய பிரதேசத்தில் சிறை இடிந்து விழுந்து விபத்து – 22 கைதிகள் காயம்!

மத்திய பிரதேசத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறை இடிந்து விழுந்ததில், அங்கிருந்த 22 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் எனும் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று அதிகாலை 5.10 மணியளவில் இந்த சிறைச்சாலையின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிறையில் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிறையில் இருந்த 22 கைதிகள் காயமடைந்துள்ளனர். அதில் ஒரு கைதி பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மற்ற காயமடைந்த கைதிகள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இது குறித்து பிந்த் மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் சிங் அவர்கள் கூறுகையில், சம்பவம் நடந்தபொழுது சிறைக்குள் 255 கைதிகள் இருந்ததாகவும், அவர்களில் 22 கைதிகள் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே இந்த சிறை மிகவும் பழமையானது எனவும், கடந்த இரண்டு நாட்களாக பெய்த இடைவிடாது பெய்த மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *