43 மத்திய அமைச்சர்கள்…. 400 கிலோ மீட்டருக்கு மேற்கொள்ளவிருக்கும் ஜன் ஆசிர்வாத் யாத்திரா

பிரதமர் நரேந்திர மோடி தனது விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் புதிதாக பதவியேற்றுள்ள 43 மத்திய அமைச்சர்களை குளிர்கால தொடர் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைக்க அனுமதிக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் பொதுமக்களிடம் தங்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு புதிய யுக்தியை கையாள விருக்கின்றனர். அதன்படி ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஜன் ஆசீர்வாத் யாத்திரா பயணத்தை அவர்கள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்த யாத்திரை ஆனது மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள இந்த 43 அமைச்சர்களும் தங்களது சொந்த தொகுதியில் இருந்து 300 முதல் 400 கிலோமீட்டர் வரையில் யாத்திரை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த யாத்திரையானது திறந்தவெளி வாகனங்களில் நடைபெறும். மூன்று முதல் நான்கு லோக்சபா தொகுதிகளுக்கு அவர்கள் தங்களது சொந்த மாவட்டங்களில் இருந்து செல்கின்றனர்.

இதன்படி பார்க்கும்பொழுது பாஜக 15 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்து 150 லோக்சபா தொகுதிகளையும் முழுமையாக கவர் செய்ய இருப்பதாக தெரிகிறது.

இது முறையே உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கிறது.

உதாரணமாக சொல்லப்போனால் மின்துறை அமைச்சர் ஆர்கே சிங் மூன்று நாட்களில் தனது தொகுதியான ஆராவில் இருந்து கயா நோக்கி பயணிப்பார். அதேநேரத்தில் தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் ராஜஸ்தானின் ஆல்வார் நோக்கி செல்வார் மூன்று நாள் பயணத்தின்போது கிராமங்கள் அல்லது சிறு நகரங்களில் அமைச்சர்கள் இரவு தங்குவார்கள். மற்றும் மூன்று நாள் பயணத்தின் பொழுது நடுவே மக்களையும் அவர்கள் நேரில் சந்திப்பார்கள். முக்கிய மத தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தேசிய மற்றும் மாநில அளவிலான வீரர்கள், தியாகிகளின் குடும்பங்களின் பணியாளர்கள் மற்றும் மதத்தலங்களுக்கு அவர்கள் பயணம் மேற்கொள்வார்கள்.

இந்த பயணத்தை முன்னிட்டு அனைத்து பாஜக எம்.பிகளும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் தங்கள் தொகுதியில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளார்கள்.

நரேந்திர மோடி பிரதமராக வந்த பின்னர் பொது மக்களுக்கு எட்டாத இடத்தில் அமைச்சர்கள் இருக்கக்கூடாது. அவர்களுடன் இணைந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். அவரது அமைச்சரவை சபையின் ஒவ்வொரு அமைச்சரும் மக்களுடன் இணைந்து இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். பொதுமக்களும் அமைச்சர்கள் உடனான தொடர்பை உணர வேண்டும் என பாஜகவின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய அமைச்சரவை விரிவாக்கம் சமநிலை மற்றும் ஒரு பரந்த பிரதிநிதித்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் 11 பெண் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அதேநேரத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பிராந்தியங்கள் பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளன மூத்த கட்சியின் தலைவர் மற்றும் ஓபிசி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதி பிரிவில் இருந்து முதல்முறையாக அமைச்சர்கள் குழுவில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளனர். அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியம் என்றும் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாத்திரை பிரம்மாண்டமானதாகவும், மக்களை கவரும் வகையிலும், சாதாரண மக்களை சென்றடையும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் புதிய மாவட்டத்திற்குள் நுழையும் பொழுது அமைச்சர்கள் அன்புடன் வரவேற்கப்பட வேண்டும் என்றும் கட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமூக விலகல் மற்றும் முகக் கவசங்கள் அணிதல் சானிடைசர்களை பயன்படுத்துவது போன்ற அனைத்து covid-19 நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாத்திரையின் வழியில் நரேந்திர மோடி அரசு செய்த திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை விளக்கும் பதாகைகள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் மற்றும் பிரதமரின் புகைப்படம் மற்றும் பாஜகவின் தாமரை சின்னமானது மிகப் பெரிய கட் அவுட்டுகளில் இடம் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாத்திரை செல்லும் வழியில் எளிய மக்களுடன் பேச வேண்டும் என்றும் அவர்களது நிறை குறைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *