குடும்பத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் ராணுவத்தில் ஆள் சேர்க்கும் சீனா!!

இந்தியா – சீனா எல்லையான LINE OF ACTUAL CONTROL பகுதியில் தங்கள் நாட்டு ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் குடும்பத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் திபெத்தியர்களை ராணுவத்தில் சேர்த்து வருகிறதாம் சீனா. இந்த ஆள் சேர்ப்பு நடவடிக்கை கட்டாயமான ஒன்றாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத் இளைஞர்களின் உண்மை மாறாத குணத்தை பரிசோதித்த பிறகே ராணுவத்தில் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதாக தனியார் பத்திரிகை நிறுவனம் தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

வானிலை மிகவும் மோசமாக உள்ள பகுதிகளான லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் மாதிரியான பகுதிகளில் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை அதிகளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி – பிப்ரவரி முதலே திபெத் இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்து வருகிறதாம் சீனா. முக்கியமாக சீன ராணுவத்தில் இணையும் திபெத் இளைஞர்களுக்கு சீன மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை பிரச்சனை தொடர்பாக பலமுறை நடைபெற்ற உயர்மட்ட குழு பேச்சுவார்த்தையில் எந்தவித சுமூக நடவடிக்கையும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *