அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து!

தொடர்ந்து நான்கு போட்டிகளாக எதிராளிக்கு ஒரு செட்டை கூட விட்டுக்கொடுக்காமல் நேர் செட் கணக்குகளில் வென்று அரையிறுத்திக்கு முன்னேறினார் பி. வி சிந்து.

ஜப்பான் வீராங்கனையான யமகுச்சியுடனான இரண்டாவது செட்டில் சிந்து போராடிய விதத்திற்கு இப்போதே பதக்கத்தை தூக்கி கொடுத்துவிடலாம் என பேட்மிண்டன் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அழுத்தமான சூழல்களிலும் அவர் அவுட்டுக்காக அவ்வளவு நிதானமாக முடிவெடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்கப்பதக்கத்தை நோக்கி வேகமாக முன்னேறுகிறார் பி. வி சிந்து.

சிந்துவின் வெற்றியைத் தொடர்ந்து #PVS #Olympics #Tokyo2020 ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *