பிரிட்டனில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கு தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் 60% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்தன. இதனைத் தொடர்ந்து அங்கு முழுமையாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடையில்லை. இரவு நேர மதுபான விடுதிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் முழுமையான கட்டுப்பாடுகளை தளர்த்துவது எதிர்காலத்தில் தொற்றை அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் பிரிட்டனில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 31,117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சத்தைக் கடந்துள்ளது.

11.83 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் 85 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,29,515 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *