பாஜகவின் எதிரணிக்கு யார் தலைவரானாலும் சம்மதமே – மம்தா பானர்ஜி

பாஜகவுக்கு எதிராக உருவாகும் கூட்டணியின் தலைவர் யார் என்பது, சூழ்நிலையை பொறுத்து முடிவாகும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து 2ஆவது முறையாக வெற்றி பெற்ற பிறகு மம்தா பானர்ஜி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இப்பயணத்தின் தொடக்கமாக பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக மம்தா சந்தித்து பேசினார்.

பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதையடுத்து, பாஜகவுக்கு எதிரான அணிக்கு தலைமை வகிக்கப்போவது யார் என செய்தியாளர்கள் முதலமைச்சர் மம்தாவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மம்தா, தான் ஜோசியம் அறிந்தவர் அல்ல என்றும் எனினும் பாஜகவுக்கு எதிராக உருவாகும் அணிக்கு யார் தலைவர் என்பது சூழலை பொறுத்து முடிவாகும் என்றார்.

பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு யார் தலைவராக வந்தாலும் அது தனக்கு சம்மதம்தான் என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *