Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; Blogger_Importer has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\blogger-importer\blogger-importer.php on line 44

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; MT_Import has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\movabletype-importer\movabletype-importer.php on line 32

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; RSS_Import has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\rss-importer\rss-importer.php on line 43

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; WP_Categories_to_Tags has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\wpcat2tag-importer\wpcat2tag-importer.php on line 31
ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி சிந்து காலிறுதிக்கு தகுதி - Thandoravoice

ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி சிந்து காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து காலிறுதிக்கு தகுதிப் பெற்றார்.

ஒலிம்பிக் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்தியாவின் பி.வி சிந்து, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மியா பிளிச்பெல்ட்டை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாடிய சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்றார்.

இதனையடுத்து பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுக்கு அவர் தகுதிப் பெற்றார். சிந்துவின் இந்த அபார வெற்றியைத் தொடர்ந்து மகளிர் பேட்மிண்டனில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *