அதிகளவு பனம்பழம் தின்ற காட்டு யானைக்கு நேர்ந்த சோகம்!!

அதிகளவு பனம்பழம் தின்றதால் காட்டு யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அருகே முத்துமாரியம்மன் கோயில் – சாம்பார் பள்ளம் ஏரி காப்புக்காட்டில் 22 வயதுடைய ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு அரசு வன கால்நடை மருத்துவருடன் வனத்துறையினர் சென்றனர். இதில் யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சுமார் அரை டன் அளவுக்கு பனம்பழம் தின்றது தெரியவந்தது. அதிகளவு பனம்பழம் தின்றதால் செரிமானம் ஆகாமல் வயிறு வீங்கி யானை இறந்தது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து யானையின் தந்தங்களை அகற்றிய வனத்துறையினர், அதன் உடலை வனப்பகுதியிலேயே புதைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *