சிறுநீர் நுரை போன்று வெளியேறுகிறதா? அலட்சியப்படுத்தாதீர்கள்!!

சில சமயத்தில் சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிப்படும், இது எதனால் என்பதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

சில சமயம் சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று தென்பட நேரிடும். இதை நாம் மிக சாதாரணமாக கருதுவது உண்டு. ஆனால், இது புரோட்டினூரியா எனப்படும் சிறுநீரில் புரதம் கலப்பதை வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறியாகும்.

நுரை போன்று சிறுநீர் வெளிப்படும் போது அச்சப்பட தேவையில்லை. இரத்தத்தில் இருக்கும் பொதுவான புரதம் ஆல்புமின் தொடர்ந்து நுரை போன்று சிறுநீர் வெளிவருவதை கண்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது நல்லது.

பூச்சி, பாம்பு கடித்து விஷம் ஏறுதல், உணவில் அதிக இரசாயன கலப்பு, கல்லீரல் நோய், கல்லீரல் சேதம், கல்லீரல் செயலிழப்பு, கர்ப்பம் போன்ற காரணங்களினாலும் ஏற்படலாம்.

இது போன்று உங்களுக்கு ஏற்படமால் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் அதிகம் பருகி வர வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *