‘அண்ணாத்த’விற்கான டப்பிங் பணிகளில் சூப்பர் ஸ்டார்!!

அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் தொடங்கியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பேசும் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார்.

அண்ணாத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்பட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றால் பலமுறை படப்பிடிப்பு தடைபட்ட நிலையில், இந்த வருடம் தேர்தலுக்கு பின் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பிறகு சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்தது, சில காட்சிகளை கொல்கத்தாவில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பு சன் பிக்சர்ஸ், அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாகும் என்பதை உறுதி செய்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். அதன்படி ஆகஸ்டில் அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர். நவம்பர் 4-ம் தேதி படம் திரைக்கு வரும்.

தற்போது சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் அண்ணாத்த திரைப்படத்திற்கான  டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக சூப்பர் ஸ்டார், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். விரைவில் அவரது அடுத்தப் படம் குறித்த செய்தியும் வெளியாகவிருக்கிறதாம். அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் அல்லது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என்கின்றன தகவல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *