‘வலிமை’ நாயகி ஹுமா குரேஷிக்கு இன்று பிறந்தநாள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காதலியாக காலா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஹுமா குரேஷி தற்பொழுது தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

பாலிவுட்டில் வளர்ந்துவரும் கதாநாயகியாக இருக்கும் ஹுமா தற்பொழுது தென்னிந்தியாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இருப்பினும் காலா திரைப்படத்தின் மூலம் ஜரினாவாக நம் அனைவருக்கும் அறிமுகமான ஹுமா குரேஷி ஜூலை 28 ஆம் தேதியான இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி சமூக வலைதளங்களில் இவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பார்த்தவுடனே பற்றிக்கொள்ளும் அழகைக் கொண்டு இந்தி சினிமாவின் குயினாக வலம் வரும் ஹுமா குரேஷி இப்பொழுது பலராலும் உற்று நோக்கப்படும் திறமை மிக்க வளர்ந்துவரும் நாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார். ஹிந்தி திரைப்படத் துறையில் பல்வேறு திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வரும் இவர் முதன்முதலில் அறிமுகம் ஆக இருந்தது தல அஜித்குமார் திரைப்படத்தில் தான்.

பில்லா 2 திரைப்படத்தில் நழுவிய வாய்ப்பு தற்போது வலிமை திரைப்படத்தில் கூடியுள்ளதை நினைத்து ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *