திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று போராட்டம்

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீடுகள் முன்பு பதாகைகள் ஏந்தி இன்று போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி கடந்த23-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘தேர்தல்வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் மலிவான அரசியல் ஆயுதத்தை திமுக கையில் எடுத்துள்ளது. இதை கண்டித்து ஜூலை 28-ம் தேதி அதிமுகவினர் அவரவர் வீடுகள் முன்பு பதாகை ஏந்தி முழக்கம் எழுப்பி போராட வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு அதிமுகவினர் அவரவர் வீடுகள் முன்பு பதாகை ஏந்திபோராட்டம் நடத்த தொடங்கி உள்ளனர். சொந்த ஊரான தேனியில் ஓபிஎஸ்ஸும், சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் போராட்டம் நடத்துகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சொன்னிங்களே செஞ்சீங்களா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *