ஒலிம்பிக்கிலும் பெண்களின் ஆடை மீது தொடரும் விமர்சனங்கள்!!

நீங்கள் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் உங்களது விளையாட்டு துறையில் நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அது உண்மையான வெற்றி கிடையாது. நீங்கள் கொடுக்கப்பட்ட ஆண்களால் வகுக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்கு மாறுதலாக நின்றால் நீங்கள் அந்த சூழ்நிலையோடு ஒத்துப் போக மாட்டீர்கள்.

நார்வே நாட்டை சேர்ந்த பீச் வாலிபால் ஆடிய பெண்கள் குறைவாக தங்களது உடல்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்ததால் அபராதம் கட்ட சொல்லப்பட்டிருக்கின்றனர். அதே நேரத்தில் பாராஒலிம்பிக்கில் ஈடுபடும் விளையாட்டு வீராங்கனையான ஒலிவியா பிரியின் ஆடைகள் மிகவும் குட்டையானதாகவும் முறையற்றதாகவும் இருப்பதாக சொல்லப்பட்டு சர்ச்சைகள் கிளம்பி உள்ளது. ஆனால் இதுகுறித்து யாரும் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தாமல் இருப்பதில் எந்தவிதமான ஆச்சரியங்களும் இல்லை.

விளையாட்டில் ஈடுபடும் பெண்களின் உடல்கள் இயல்பாகவே கட்டுக்கோப்பானவையாகmuscle நிறைந்தவையாக இருக்கும்.

விம்பிள்டன் போட்டிகளில் பொழுது பெண்கள் மிகக் குட்டையான உடைகளை அணிய வேண்டுமென ஃபிஃபாவின் பிரசிடன்ட் செப் பிளாட்டர் தெரிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. குட்டையான ஆடைகள் பெண்களை மிகவும் அழகாக காட்டும் என்று அவர் தெரிவித்தார். இதற்கும் விளையாட்டிற்கும் தொடர்பு இல்லை எனும் போதிலும் இது போன்ற கருத்துக்கள் வெளிப்படையாகவே வைக்கப்படுகின்றன. பெண்கள் மிக அதிகமாக விளையாட்டு துறைகளில் ஈடுபட்டு வரும் போதிலும் ஒலிம்பிக் ஜோதியை பெண் ஒருவர் எடுத்துச்செல்லும் இந்த காலத்திலும் கூட பெண்கள் மற்றும் அவர்களின் உடை குறித்த பேச்சுகள் சர்ச்சைகளை கிளப்பாமல் இல்லை. முன் காலங்களில் பெண்கள் தங்களது வலிமை சார்ந்த போட்டிகளில் ஈடுபடாமல் அவர்களுக்கு எது பொருந்தும் என்று ஆண்களே முடிவு செய்து ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபட்டதால் அவர்களுக்கான உடை மிகவும் குட்டையான தாகவும் அவர்களுடைய உடலோடு ஒட்ட பட்டதாகவும் வடிவமைக்கப்பட்டன. ஆனால் தற்பொழுது கால்பந்து, பாக்சிங் போன்ற ஆண்கள் விளையாடும் அனைத்து விளையாட்டுகளையும் பெண்கள் விளையாட ஆரம்பித்துள்ள பொழுதும் குட்டையான உடைகளையே அணிய வற்புறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *