‘சார்பட்டா பரம்பரை’க்காக பா. ரஞ்சித்தை மனம் குளிர பாராட்டிய நாசர்!!

“எஞ்சமூகத்துக்கு இப்படியொரு படம் கொடுத்ததுக்கு உங்கையப் புடிச்சு ஒரு நூறு முத்தங்களைக் கொடுப்பேன்” என்று ’சார்பட்டா பரம்பரை’க்காக இயக்குனர் பா. ரஞ்சித்தை பாராட்டியிருக்கிறார் நடிகர் நாசர்.

சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினர் பலரும் உச்சி குளிர்ந்து பாராட்டி வருகிறார்கள். தமிழ் சினிமாவின் சிறந்த ஸ்போர்ட்ஸ் படங்களில் ஒன்றாகவும் விமர்சகர்கள் பட்டியலிட்டுள்ளார்கள்.

ஆர்யா, துஷாரா விஜயன், வேம்புலியாக ஜான் கொக்கன், டான்சிங் ரோசாக ஷபீர்,ஜான் விஜய் என நடிப்பில் கலக்கியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் நாசர், ’சார்பட்டா பரம்பரை’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ரஞ்சித்துக்கு கடிதம் ஒன்றினை தனது கைப்பட எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “தம்பி ரஞ்சித் நான் உன்னை பாராட்ட மாட்டேன். உங்கையப் புடிச்சு ஒரு நூறு முத்தங்களைக் கொடுத்து நன்றின்னு ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன். இப்படியொரு படம் எஞ்சமூகத்துக்கு கொடுத்ததுக்கு” என்று தனது மனமார்ந்த வாழ்த்துக்களை கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *