முயற்சி செய்தும் முடியவில்லை… கணவரை பிரிகிறார் மியா கலிஃபா

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான நடிகை மியா கலிஃபா, தனது கணவர் ராபர்ட் சாண்ட்பர்க்கை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

மியா கலிஃபா  கடந்த 2011ம் ஆண்டு தனது பள்ளிக் காதலனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016ம் ஆண்டு பிரிந்தனர்.

இதையடுத்து ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2020 மார்ச் மாதம் அறிவித்திருந்தார். கொரோனா பிரச்சனை காரணமாக இருவரும் எளிமையான முறையில் வீட்டிலே திருமணம் செய்து கொண்டதாக கூட்டாக அறிவித்தனர். இந்நிலையில், நாங்கள் இருவரும் பிரிந்து வெவ்வேறு பாதையில் செல்ல திட்டமிட்டுள்ளதாக மியா பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக மியா கலிஃபா கூறியுள்ளதாவது, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எங்களது திருமண உறவை தக்கவைத்துக் கொள்ள நாங்கள் போதுமான முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. அதனால், திருமண உறவை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். நாங்கள் இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்தாலும், எங்களது நட்பை தொடர முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், விவாகரத்து பெறுபவர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக வாழ்த்து தெரிவியுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *