10 வயது மகனுடன் ஆபாச நடனம்; முகம் சுளிக்க வைத்த வீடியோ!’ – அதிரடியில் இறங்கிய மகளிர் ஆணையம்

டெல்லியில் தனது 10 வயது மகனுடன் ஆபாசமாக நடனமாடி சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி மகளிர் ஆணையம், காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கும் வீடியோ ஒன்று காண்போரை முகம் சுளிக்கச் செய்யும் வகையில் உள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடரும் டெல்லியைச் சேர்ந்த அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியாகியது. வீடியோவில், அந்த பெண் 10-லிருந்து 12 வயதுடைய சிறுவன் ஒருவனுடன் அநாகரீகமான முறையில் மிகவும் அருவருக்கத்தக்க அசைவுகளுடன் நடனமாடுகிறார். மேலும், அந்த பெண்ணுடன் நடனமாடிய அந்த சிறுவன் அவரின் மகன் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலானது.

சொந்த மகனுடன் அந்த பெண் ஆபாசமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் ஏராளமானோர் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கடுமையான கருத்துக்களைப் பதிவிட்டனர். அதன் காரணமாக, அந்த பெண் சமூக வலைத்தளங்களில் இருந்து அந்த வீடியோவினை நீக்கி விட்டார். ஆனால், இணையவாசிகள் அதைப் பதிவிறக்கம் செய்து தற்போது வரையிலும் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வைரல் வீடியோவானது டெல்லி மகளிர் ஆணைய உறுப்பினர்களின் கவனத்துக்குச் செல்லவே, தற்போது வீடியோ பதிவிட்ட பெண்ணுக்குச் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து, டெல்லி போலீஸார் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக வீடியோ பதிவிட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவிருக்கின்றனர் அதே போல், அம்மாவுடன் சேர்ந்து நடனமாடிய சிறுவனுக்கு சிறப்பு மன நல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *