ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு ஆபாச படம் மூலம் ஒரு நாளைக்கு இவ்வளவு வருமானமா?- வெளியான அதிர்ச்சித் தகவல்!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி அதனை மொபைல் ஆப்-ல் கட்டணம் பெற்று வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழிலதிபரான ராஜ் குந்த்ரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பங்குதாரர் ஆகவும் இருக்கிறார். இவர் கட்டுமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் ராஜ் குந்த்ரா ‘JL Media’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை நிறுவி அதில் வெப் சீரீஸ்களை தயாரித்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு, ஆபாச குறும்படங்களை உருவாக்கி அதனை மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கும்படி வெளியிடுகிறார்கள் என புகார் கிடைத்திருக்கிறது. அதனை அடிப்படையாக கொண்டு தீவிரமாக விசாரித்த போது இந்த ஆபாச பட உருவாக்கத்திலும், அதனை மொபைல் அப்ளிகேஷனில் வெளியிடுவதிலும் முக்கிய நபராக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா இருப்பது தெரிய வந்தது. அதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுக்கு நம்பகமான ஆதாரங்களை போலீசார் திரட்டி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே ராஜ் குந்த்ராவை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்திருக்கின்றன.

அதில், ஆபாச படங்களை இது போன்று செயலியில் இந்தியாவிலிருந்து அப்லோட் செய்ய முடியாது என்பதால் லண்டனில் இருக்கும் அவருடைய மைத்துனர் பிரதீப் பக்‌ஷி என்பவரின் கென்ரின் நிறுவனம் மூலமாக வீடியோக்களை அப்லோட் செய்திருக்கின்றனர். இந்தியாவிலிருந்து வீ- ட்ரான்ஸ்ஃபர் வாயிலாக லண்டனுக்கு இத்தகைய வீடீயோக்களை அனுப்பியுள்ளனர். Hotshot என்ற செயலியில் பணம் செலுத்தி இந்த வீடியோக்களை பார்க்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இந்த செயலி ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலும் டவுன்லோட் செய்ய முடியும்.

மும்பை காவல்துறையினர் தற்போது ஆபாச வீடியோக்கள், வாட்ஸ் அப் சாட்கள், பணப் பறிமாற்ற ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அதே நேரத்தில் எவ்வளவு பணத்தை ராஜ் குந்த்ரா இந்த வகையில் சம்பாதித்திருக்கிறார் என்ற முழு விவரத்தை இன்னும் போலீசார் வெளியிடவில்லை. இருப்பினும் ராஜ் குந்த்ராவின் பல்வேறு வங்கி கணக்கில் உள்ள 7.5 கோடி ரூபாய் பணத்தை போலீசார் முடக்கியுள்ளனர். அவர் இத்திரைப்படங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 லட்ச ரூபாய் சம்பாதித்து இருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

ராஜ் குந்த்ரா தங்களை மிரட்டி நிர்வாணப்படுத்தி ஆபாச படங்களில் நடிக்க வைத்ததாக 9 பெண்கள் புகார் அளித்திருப்பதால் அவர் மீது ஏமாற்றுதல் மோசமாக நடந்து கொள்ளுதல், ஆபாச வீடியோக்கள் தயாரித்து பொதுவெளியில் வெளியிடுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *