மெக்காவில் பாதுகாப்புப்பணியில் ஏற்படுத்தப்பட்ட அதிரடி மாறுதல்!!

சவுதியில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக பெண்களின் நலன் சார்ந்த சீர்த்திருத்தங்களை இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார். குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் அவர், பொருளாதார மற்றும் சமூக சீர்த்திருந்தங்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் பெண்கள் தனியே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் ராணுவத்திலும் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படும் மெக்கா-மெதினாவில் 12க்கும் அதிகமான ராணுவ வீராங்கனைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காக்கி உடையில் மிளிரும் அவர்கள், கருப்பு நிற துணியால் தலையில் முக்காடிட்டு கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *