சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தும் ‘சார்பட்டா பரம்பரை’ !!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘காலா’.இத்திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு, தயாரிப்பில் கவனம் செலுத்திவந்த பா.ரஞ்சித், நடிகர் ஆர்யாவை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவித்தார். வடசென்னை மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டைக் கதைக்களமாகக் கொண்டு சார்பட்டா பரம்பரை உருவாகியுள்ளது.

சார்பட்டா பரம்பரை திரைப்படம் வரும் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு 9.45 மணியளவில் படம் வெளியானது.

3 மணி நேரம் நீளம் கொண்ட இத்திரைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. சார்பட்டா பரம்பரை திரைப்படம் குறித்த தகவல்களே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் நிரம்பியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *