எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் ரெய்டு!

கரூரில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் சாயப்பட்டறை உள்ளிட்ட20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அவருக்கு சொந்தமான ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த நிலையில் அப்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுப்பப்பட்ட நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *