சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டடத்தில் தீ விபத்து! – மீட்பு பணிகள் தீவிரம்

சென்னை அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகே உள்ள கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க சென்னை எழும்பூர் பகுதியிலிருக்கும் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் ராட்சத இயந்திரங்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கட்டடங்களில் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீயை அணைக்கும் பணியில் 50 ற்கும் அதிகமான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்டடத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில் கணினி விற்பனை நிறுவனத்தில் இந்த தீ விபத்து நேரிட்டதாக தெரியவந்திருக்கிறது.
அந்த ஒரு கட்டடத்தில் மட்டும் சுமார் 20க்கும் அதிகமான நிறுவனங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *