6,300 அடி மலை உச்சியில் ஊஞ்சல் விளையாடிய பெண்கள்… திடீரென நேர்ந்த விபரீதம் – அதிர்ச்சி வீடியோ

உலகில் பல சாகச விளையாட்டுகளுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. பெரிய பள்ளத்தாக்கில் ஒரே ஒரு கயிறு கட்டி நடப்பது. இரு மலை உச்சியை இணைக்கும் வகையில் இடைவெளி விட்டு பொருத்தப்பட்டிருக்கும் பலகையின் மேல் நடப்பது. இதுதவிர, மலையில் உச்சியில் இருந்து குதிக்கும் பங்கி ஜம்ப்பிங் விளையாட்டு, இதில் ஒருவரது காலில் மட்டும் கயிறு கட்டப்பட்டிருக்கும். இதுபோன்ற எண்ணற்ற விபரீத விளையாட்டுகள் உள்ளன. இந்த சாகச விளையாட்டுகளை மேற்கொள்ளவதில் மக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், இந்த விளையாட்டில் ஏதேனும் விபரீதம் நடந்தால் என்ன நடக்கும்? அப்படியொரு அதிர்ச்சி வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாக பரவி அதிர்ச்சியளிக்கிறது.

ரஷ்யாவில் 6,300 அடி உயரம் கொண்ட குன்றின் மேல் அமைக்கப்பட்ட ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தனர். இந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக வெளியான அந்த வீடியோவில், ரஷ்ய குடியரசான தாகெஸ்தானில், காஸ்பியன் கடல் அருகே அமைந்துள்ள சுலக் பள்ளத்தாக்கின் மேல் கட்டப்பட்டுள்ள ஊஞ்சலில் பெண்கள் ஜோடி அமர்ந்திருக்கின்றனர் . அதாவது, ஊஞ்சல் 6,300 அடி உயரம் கொண்ட பள்ளத்தாக்கின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஊஞ்சல் ஆடும் போது அந்தரத்தில் பறப்பது போல உணர்வர்.

மேலும் ஊஞ்சல் ஆடும் நபர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பு கவசமும் வழங்கப்படவில்லை. இரு பெண்களும் உற்சாகமாக ஊஞ்சலில் அமர்ந்து விபரீத விளையாட்டில் ஈடுபட்டனர். ஊஞ்சலின் பின்னால் இருந்த ஒரு நபர் அதனை வேகமாக நகர்த்தினார். மூன்றாவது முறை வேகமாக நகர்த்தும் போது, ஊஞ்சல் நேராக செல்லாமல் சற்று பக்கவாட்டில் பறக்க ஆரம்பித்தது. பக்கவாட்டில் பறந்த வேகத்திலேயே மீண்டும் திரும்பிய ஊஞ்சல் இருக்கை, ஊஞ்சல் கம்பியில் வேகமாக இடித்தது. இந்த அதிர்ச்சியில் இருக்கை இருந்த பெண்கள் இருவரும் ஊஞ்சலில் இருந்து தவறி பள்ளத்தாக்கில்  விழுந்தனர். இந்த கொடூரமான விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த வீடியோ 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை இணையத்தில் பார்க்கப்பட்டுள்ளது. மற்றும் சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த சக யூசர்களிடம் இருந்து ஏராளமான கருத்துகள் குவிந்தன. இந்த அதிர்ச்சி சம்பவத்தால் பலர் திகிலடைந்த நிலையில், ஊஞ்சலில் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததை பல ட்விட்டர்வாசிகள் சுட்டிக் காட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *