கோலிவுட்டா டோலிவுட்டா யார் பெருசு அடிச்சு காட்டு… ட்விட்டரில் ரசிகர்கள் மோதல்

பொதுவாக ட்விட்டர் பக்கத்தில் தல மற்றும் தளபதி ரசிகர்கள் இடையே தான் ரசிகர்களின் மோதல் இருக்கும். தல தான் பெஸ்ட் என்று தல ரசிகர்களும், தளபதி தான் பெஸ்ட் என்று தளபதி விஜய்யின் ரசிகர்களும் வழக்கமாக மோதிக்கொள்வர். அதுவும் கடந்த சில மாதங்களாக இவர்களின் ரசிகர்கள் சண்டை இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இந்நிலையில் நிலைமை கொஞ்சம் மாறி தல மற்றும் தளபதி ரசிகர்கள் ஒரே இடத்தில் ஒன்றாக நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் டோலிவுட் ரசிகர்கள் தான்.

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தற்பொழுது நடிகர் வெங்கடேஷ் அவர்களால் டோலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு நாரப்பா என்ற பெயரில் அமேசானில் நேற்று வெளியானது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் சிறந்தவரா அல்லது வெங்கடேஷ் நடிப்பில் சிறந்தவரா என்பன போன்ற போட்டிகள் ஆரம்பமாகின. இந்நிலையில் டோலிவுட்டு தான் தென்னிந்திய சினிமாவை ஆள்கிறது என டோலிவுட் ரசிகர்கள் ட்விட்டரில் செய்தனர். இந்தியா முழுவதும் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற பேன் இந்தியா திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனை தொடர்ந்து தல, தளபதி, சூப்பர் ஸ்டார், உலக நாயகன், மக்கள் செல்வன், நடிப்பின் அசுரன் என அனைவரது ரசிகர்களும் ஒன்று சேர்ந்து கோலிவுட் தான் இந்திய சினிமாவையே ஆள்கிறது என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ரசிகர்களின் மோதல் ட்விட்டரில் எப்போது நிற்கும் என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *