16 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகை ஆளும் தேவசேனா!!

நடிகை அனுஷ்கா சினிமாவில் கால் பதித்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஸ்வீட்டி ஷெட்டி என்ற இயற்பெயர் கொண்ட இவர் அடிப்படையில் ஒரு யோகா ஆசிரியர். நடிகர் நாகர்ஜுனா வாயிலாக திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்டார்.

அனுஷ்கா நடித்த படங்கள் பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே இருக்கும்.

அனுஷ்காவின் திரைப்பயணம் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், 2005-ல் வெளியான தெலுங்கு திரைப்படமான Super-ல் தொடங்கியது. தமிழில் ரெண்டு திரைப்படம் மூலமாக அறிமுகம் ஆனாலும் சிங்கம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். என்னை அறிந்தால், வேட்டைக்காரன், லிங்கா, தாண்டவம், இரண்டாம் உலகம் உட்பட இதுவரை பல்வேறு மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய box office ஹிட்டாகிய பாகுபலி, அருந்ததி, ருத்ரமாதேவி, தெய்வத்திருமகள் போன்ற திரைப்படங்கள் தமிழ்நாடு அரசின்

திரைப்பட விருது உட்பட பல விருதுகளை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. பாகுபலியில் இவர் நடித்த தேவசேனா கதாப்பாத்திரம் இவருக்கு உலகெங்கிலும் ரசிகர்களை பெற்றுத்தந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *