குழந்தை தொழிலாளர்கள் 23 பேர் பிளஸ் 2 தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள், கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு வயதுக்கேற்ற கல்வி வழங்கப்பட்டு மீண்டும் முறைசார் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் இடைநின்று விடாமல் இருப்பதையும் கண்காணிக்கின்றனர். இதுபோல், முறைசார் பள்ளியில் சேர்க்கப்பட்ட சிறுவர்களில், இந்தாண்டு 23 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *