அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை!!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு கடந்த தின தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தற்போது மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்டகாலம் அதிமுக கட்சியின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *