Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; Blogger_Importer has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\blogger-importer\blogger-importer.php on line 44

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; MT_Import has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\movabletype-importer\movabletype-importer.php on line 32

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; RSS_Import has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\rss-importer\rss-importer.php on line 43

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; WP_Categories_to_Tags has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\wpcat2tag-importer\wpcat2tag-importer.php on line 31
ஸ்பெயினிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள்!! - Thandoravoice

ஸ்பெயினிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள்!!

ஸ்பெயின் நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 58 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை  பன்னாட்டு விமான நிலைய தபால் சரக்ககப் பிரிவுக்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து வரும் பார்சலில் பெரும் அளவில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தபால் சரக்ககப் பிரிவுக்கு வந்த பார்சல்களை தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது ஸ்பெயின் நாட்டில் இருந்து புதுச்சேரி ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு முகவரிக்கு பார்சல் வந்திருந்தது. அதில் வாழ்த்து அட்டைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் 2 வெள்ளி கவர்கள் இருந்தன. அவற்றில் 994 பிங்க் நிற போதை மாத்திரைகளும் 249 ஸ்டாம்ப் போதை மாத்திரைகளும் இருந்தன.

இவை ரூ. 56 லட்சம் மதிப்பு மிக்கவை. போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் புதுச்சேரி ஆரோவில் முகவரிக்கு சென்று சோதனை செய்தனர்.

அந்த முகவரியில் திருநெல்வேலியை சேர்ந்த ரூபக் மணிகண்டன்(29), கோழி பண்ணையில் வேலை செய்யும் லாய் வைகஸ் (28) இருந்தனர். வீட்டில் சோதனை செய்த போது ஆந்திரா மாநில குண்டூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ 500 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

இது தொடர்பாக மணிகண்டன், வைகஸ் ஆகியோரை கைது செய்தனர். ரூ. 58 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், ஸ்டாம்ப் மாத்திரைகள், கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் என தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *