சென்னை ஐஐடியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் இன்று விசாரணை

சென்னை ஐஐடியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் பிற்பகலில் விசாரணை நடத்துகின்றனர். தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹேல்கர் ஐஐடியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஆய்வு நடைபெறுகிறது.

நாடு முழுவதுமுள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது கடந்த சில வருடங்களில் தொடர்கதையாகிவருகிறது. குறிப்பாக மத்திய கல்வி நிறுவனமான மெட்ராஸ் ஐஐடி-யில் கடந்த சில வருடங்களாகத் தற்கொலைச் சம்பவங்களும், மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கையும் அதிக அளவில் பதிவாகிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

உதவிப் பேராசிரியரான விபின் பட்டீல் ஐஐடி மெட்ராஸில் சாதிய பாகுபாடு நிலவுவதாகக் கூறி ராஜினாமா கடிதம் அளித்து பணியிலிருந்து விலகியிருப்பதும், கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் பாதி எரிந்துபோன சடலம் ஐஐடி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் சென்னை ஐஐடியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் பிற்பகலில் விசாரணை நடத்தவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *