தன்னைத்தானே செதுக்கிக் கொண்டவன்… சிவகார்த்திகேயனை புகழும் ரசிகர்கள்!!

சின்னத்திரையில் எளிய பின்புலத்திலிருந்து இருந்து வந்து இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். பெரிய திரைக்கு சென்றால் சிவகார்த்திகேயன் போன்று நாமும் வெற்றி பெறலாம் என்கிற நம்பிக்கை சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு சிவகார்த்திகேயனால் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மகத்தான பங்களிப்பு செய்த கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், கலைமாமணி விருது அறிவிக்கப்படுவது வழக்கம். அதனையும் சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் சிவகார்த்திகேயன்.

இவற்றிற்கெல்லாம் மேலாக அவர் ஒரு மனிதநேயர். 2013-ம் ஆண்டு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் “கருப்பன் குசும்புக்காரன்” என்ற வசனத்தின் மூலம் மக்களிடையே பிரபலமான நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது நடிகர் சிவகார்த்திகேயன் சார்பில் ரூ.25,000 நிதியுதவி வழங்கப்பட்டது.

கொரோனாவினால் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தினால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட, முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்து உதவினர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி மாபெரும் உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட சிவகார்த்திகேயன் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *