நடிகர் சூர்யா பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிற ஜூலை 23-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றையை தினம் ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது.

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிற ஜூலை 23-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றையை தினம் சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல வாடிவாசல் திரைப்படம் குறித்த அப்டேட்டுக்களும் வெளியாகும் பட்சத்தில் ரசிகர்களின் மகிழ்ச்சி ரெட்டிப்பு ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *