கொரோனா நோயாளிகள் 5 பேருக்கு மலக்குடல் ரத்தப்போக்கு: டெல்லியில் ஒரு நோயாளி மரணம்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள், கேன்சர் நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் போன்ற எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மலக்குடல் ரத்தப் போக்கு ஏற்படுவது வழக்கம். ஆனால் முதல் முறையாக நல்ல நோய் எதிர்பாற்றல் இருக்கும் கோவிட் நோயாளிகளுக்கு, தொற்று பாசிடிவ் என செய்யப்பட்டு 20-30 நாட்களுக்குப் பிறகு மலக்குடல் ரத்தக்கசிவு ஏற்படுவது அரிதானது என்பதோடு இதுதான் முதல் முறை என்கின்றனர், மருத்துவர்கள்.

லிவர் கேஸ்ட்ரோ எண்டராலஜி துறையின் பேராசிரியர் அனில் அரோரா, இந்த 5 நோயாளிகளின் ரத்தக் கசிவு நோயை உறுதி செய்தார்.

இந்த நோயாளிகளுக்கு அடி வயிற்று வலியும் மலம் கழிக்கும் போது ரத்தப் போக்கும் இருந்துள்ளது. கொரோனா தொற்றும் அதற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளும் அதாவது ஸ்டீராய்ட் போன்றவையே நோயாளிகளின் உடல் எதிர்ப்புச் சக்தியை குறைத்து விடும். இதனால் வேறு பல நோய்கள் தோன்றுகின்றன, என்று கங்காராம் மருத்துவமனை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கிறது.

இந்த ஐவரில் 2 பேருக்கு மலம் கழிக்கும் போது கடுமையாக ரத்தம் வெளியேறியதால் உயிர் காப்பு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. அதாவது பெருங்குடலின் வலது பகுதியை அகற்ற வேண்டியதாயிற்று, ஆனால் இன்னொருவருக்கு கடும் ரத்தப் போக்கு மற்றும் கோவிட் 19 நுரையீரல் நோய் இருந்ததினால் மரணம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற 3 பேருக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்தான ganciclovir வேலை செய்ததால் அவர்கள் உயிர் பிழைத்தனர், என்கிறார் டாக்டர் அரோரா.

வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் வரும் தகவல்களின் அடிப்படையில் சுய மருத்துவம் பார்த்துக் கொண்டு நோயை முற்ற விட வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *