அதானி குழுமத்தின் ரூ.43,500 கோடி மதிப்பிலான பங்குகள் முடக்கம்… காரணம் என்ன?

கொரோனா சூழலில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் நிலையில் அதானி குழுமம் அளவிட முடியா வளர்ச்சியை சந்தித்தது அனைவருக்கும் தெரியும்.

இரு தினங்களுக்கு முன்பு t இந்தக் குழுமம் புதிதாக சிமென்ட் துறையில் களம் இறங்கியது. சிமெண்ட் மற்றும் ஸ்டீல் பொருட்களின் விலையும் தற்போது அதிரடியாக உயர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதானி குழுமத்தில் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்துள்ள மூன்று அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் கணக்குகளை, மத்திய நிதி அமைச்சகத்தின் தேசிய பங்குகள் பாதுகாப்பு நிறுவனம் முடக்கியுள்ளது.

3 நிறுவனங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விவரங்கள் முறையாக இல்லாத காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *