கொரோனா முதல் அலையில் நோயாளிகளுக்கு சிறந்த உணவு வழங்கப்பட்டது – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா முதல் அலையின் போது, நோயாளிகள் அனைவருக்கும் சிறந்த உணவு வழங்கப்பட்டதாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விராலிமலை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்த அவர், செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை முன்னாள் அமைச்சர் சந்தித்தார். அப்போது, கொரோனா தொற்று முதல் அலையின் போது, அச்சம் காரணமாக தொழில் முனைவோர் மருத்துவமனை பக்கமே திரும்பிப் பார்க்காத சூழல் இருந்ததாகவும், அப்போது, நோயாளிகள் அனைவருக்கும் சிறந்த முறையில் உணவு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மருத்துவர்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில், சுகாதாரமான, சத்தான உணவு வழங்கப்பட்டதாகவும் கூறிய அவர் ஓராண்டுக்கு முன்பான உணவின் விலையும், இந்த ஆண்டு உணவின் மதிப்பும் பொருந்தாது எனவும் விளக்கமளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *