அட்டகாசமான ஆஃபர் : பணம் கட்டத் தேவையில்லை… காரை மட்டும் எடுத்துட்டு போங்க!!

கொரோனா வந்த பிறகு மக்கள் அனைவரும் கூட்டங்களைத் தவிர்க்க முடிந்த வரையில் சொந்த பைக், காரிலேயே பயணம் செய்ய விரும்புகின்றனர். சொந்தமாக ஒரு காரோ அல்லது பைக்கோ இருந்தால் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது மக்களின் விருப்பம். அத்துடன், கொரோனா பரவல், சமூக இடைவெளி போன்ற பிரச்சினைகளையும் தவிர்க்கலாம். ஆனால், தற்போதைய பொதுமுடக்கத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் பெரிய தொகை கொடுத்து கார் வாங்குவது என்பது சிரமமான ஒன்றுதான்.

கார் வாங்க ஆசை இருந்து கையில் பணம் இல்லாவிட்டாலும் ஒரு அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடியாலும், வருவாய் இழப்பாலும் தவித்து வருகின்றன. தொடர்ந்து கார் விற்பனையும் மந்தமாகியுள்ளது. இதுபோன்ற சூழலில் கார் விற்பனையை மீண்டும் உயர்த்தவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் சிறப்புத் திட்டம் ஒன்றை டொயோடா நிறுவனம் அறிவித்துள்ளது.

‘Buy Now and Pay Later’ என்ற இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் முன்பணம் எதுவும் செலுத்தாமலேயே அர்பன் குரூசர் காரை வாங்கிச் செல்லலாம். பின்னர், பொறுமையாக 5 மாதங்கள் கழித்து பணத்தைச் செலுத்தலாம். 2021 அக்டோபர் மாதத்தில் இதற்கான தொகை வசூலிக்கப்படும். தவணை அடிப்படையில் பணத்தைச் செலுத்தும் வசதி உள்ளது. இதுபோன்ற சலுகையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்கோடா நிறுவனம் அறிவித்திருந்தது. இத்திட்டம் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இந்த கொரோனா சமயத்தில் டொயோடா நிறுவனம் அறிவித்துள்ளது வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *