மாஸ்க் போட சொன்ன போலீசை தாக்கிய இளைஞர்… நினைவுகளை இழந்த போலீஸ்… சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்

இந்த ஊரடங்கு காலத்தில் தமிழக காவல்துறையினருக்கு வாகன ஓட்டிகள் சிலர் தாக்குதல்களையும் மிரட்டல்களையும் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில்ஒரு படி மேலே சென்று கேரளாவிலோ போலீசாரை தாக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மூணாறு அடுத்த மறையூர் காவல் துறையினர் கடந்த ஒன்றாம் தேதி காந்தளூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பாதை வழியாக நடந்து சென்ற ஒருவர் முகக் கவசம் அணியாமல் இருந்தால் அவரை அழைத்து முக கவசம் அணியாமல் செல்வதால் கொரோனா காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காவல்துறையினர் விளக்கியதோடு அவருக்கு அபராதமும் விதித்தனர். இதனால் காவலர்களிடம் வாக்குவாதம் செய்த அந்த இளைஞர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். அவரை இரு காவலர்கள் பிடிக்க முயன்றனர் அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து ஆஷிஷ் என்ற காவலரின் பின்மண்டையில் பலமாகத் தாக்கி இருக்கிறார். தாக்கிய வேகத்தில் அந்த காவலர் நிலைகுலைந்து சரிய மாஸ்க் அணியாமல் சென்ற அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மண்டை உடைந்து ரத்தம் வெள்ளத்தில் கிடந்த காவலர் ஆஷிஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்டது. அவருக்கு சுய நினைவு திரும்பாத நிலையில் மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆறு நாட்களுக்குப் பின்னர் சுயநினைவு திரும்பிய நிலையில் ஆஷிஷை குடும்பத்தினரும் அவரது உடன் பணிபுரிந்த காவல்துறையினருக்கும் அவரைப் பார்க்க சென்ற பொழுது அவர்களில் ஒருவரைக் கூட ஆஷிஷிற்கு அடையாளம் தெரியவில்லை. தலையில் அடிபட்டதால் அவர் அனைத்தையும் மறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் உறவினர்களும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதைக் கேள்விப்பட்ட அவரது நெருங்கிய நண்பர்களும் உயர் காவல் அதிகாரிகளும் செல்போன் வீடியோகால் மூலம் ஆஷிஷை தொடர்பு கொண்டு அவருக்கு பழைய நினைவுகளை மீட்டு எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எல்லாவற்றிற்கும் அவர் சிறு குழந்தை போல வெகுளித்தனமான சிரிப்பு ஒன்றே பதிலாக தெரிவித்து வருகிறாராம்.

இன்னும் சில மாதங்களில் காவலருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவர் பழையதை எல்லாம் மறந்து தவிப்பதைக் கண்டு அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் காவலரை தாக்கிய இளைஞரை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவரது பெயர் சுலைமான் என்பதும் போலீசார் தங்களைத் தாக்கிய அழைத்து சென்று சிறையில் அடைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காவலரை கல்லால் தாக்கி விட்டு தப்பித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா எனும் பெரும் தொற்று காலத்தில் காவல்துறையினர் நமது நன்மைக்காக தானே சொல்கின்றனர் என்பதை கூட உணராமல் அவர்களுடன் சண்டைக்குச் செல்லும் இவர்களை போன்ற நபர்கள் திருந்த வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *