தமிழ் சினிமாவின் புதிய உயரங்களை ‘வலிமை’ தொடப்போகிறது… பிரபல இயக்குனர் பேட்டி

‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பின் வினோத்,போனிகபூர், அஜித் கூட்டணி மீண்டும் ‘வலிமை’ திரைப்படத்தில் இணைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி மொத்தப் படபிடிப்பையும் முடித்தது படக்குழு. இன்னும் கிளைமேக்ஸ் காட்சி மட்டும் ஜெர்மனியில் படமாக்கப்பட உள்ளதால் கொரோனா தாக்கம் நிறைவடைய படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.

சில தினங்களுக்கு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ஹீமா குரேஷி சில திரைப்படங்கள் பெரிய சினிமா அனுபவத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளன, அவை திரையரங்குகளில் தான் காணப்பட வேண்டும். அவற்றில் வலிமையும் ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பி.எஸ் மித்ரனிடம் வலிமை திரைப்படம் குறித்து உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு தமிழ் சினிமா இதுவரை கடந்து வந்த பாதையை மாற்றி புதிய உயரங்களை வலிமை திரைப்படம் தொடும் என அவர் பதிலளித்துள்ளார்.

ஹீரோ, இரும்புத்திரை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள பி.எஸ் மித்ரன், வலிமை இயக்குனர் ஹெச்.வினோத்தின் நெருங்கிய நண்பராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *