கடையில் ரூ.5 லட்சம் சுருட்டல்… போலீசார் இருவர் ‘சஸ்பெண்ட்’

பூக்கடை பகுதியில், நகைக்கடையில், 5 லட்சம் ரூபாயை சுருட்டிய வழக்கில், இரண்டு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சென்னை, பூக்கடை காவல் நிலையத்தில், ஆயுதப்படையில் இருப்பவர் சுஜின், 32, இரண்டாம் நிலை காவலர் முஜிப்பூர் ரகுமான், 30.இவர்கள் பூக்கடை, என்.எஸ்.சி.போஸ் சாலையில், பொதுமுடக்கத்தின் போது கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, நகைக்கடை ஒன்றின் ஷட்டர் கதவு, பாதி திறந்திருந்தது. இதை பார்த்து, இவர்கள் இருவரும் கடைக்குள் சென்றுள்ளனர். கடை உரிமையாளர், பணத்தை எண்ணி கொண்டிருந்தார். உடனே காவலர்கள் இருவரும், ‘ஊரடங்கில் இரவில் கடையை திறக்கலாமா’ எனக் கேட்டு, பணத்தை எடுத்து, மீண்டும் உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு வந்துள்ளனர். ஆனால் அதில், 5 லட்சம் ரூபாய் குறைந்துள்ளது.

பணம் குறைந்தது குறித்து பூக்கடை காவல் நிலையத்தில், உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார். விசாரணையில், காவலர்கள் முஜிப்பூர் ரகுமான், சுஜின் ஆகியோர் பணத்தை எடுத்துச் சென்றது தெரிந்தது. போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *