மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… உயரப்போகும் சம்பளம்!!

அகவிலைப்படி உயர்வால் அடுத்த மாதத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிகட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்றாக ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் அகவிலைப்படி (டிஏ) உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு இறுதியில் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 17 சதவீதமாக இருந்தது. இதில், 2020 ஜனவரியில் 4 சதவீதமும், ஜூனில் 3 சதவீதமும், 2021 ஜனவரியில் 4 சதவீதமும் என மொத்தம் 11 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், இப்போது 17 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், சுமார் 15 சதவீதம் உயர்ந்து 32 சதவீத உயர்வு கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக எடுத்துக்கொண்டால், அடிப்படை பணியில் உள்ளவர்களின் அடிப்படை ஊதியமாக 18,000 இருக்கும். 15 சதவீத அகவிலைப்படி உயர்வு என்றால் மாதத்திற்கு 2,700ம், ஆண்டிற்கு 32,400ம் சம்பளத்தில் உயரும். இதன் மூலம், 50 லட்சம் மத்திய பணியாளர்களும், 61 லட்சம் பென்சன்தாரர்களும் பலன் அடைவார்கள். இதுதவிர, இரவு நேர பணிப்படி முறையிலும் மத்திய அரசு மாற்றம் செய்யவிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *