135 குழந்தைகள் முன்னிலையில் 37ஆவது திருமணம் செய்து கொண்ட முதியவர்…

135 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் 37வது திருமணம் செய்து கொள்ளும் முதியவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த முதியவரின் 36 மனைவிகளில் 28 மனைவிகள் தற்போது உயிருடன் உள்ள நிலையில் அவர்கள் முன்னிலையிலயே 37 ஆவது திருமணத்தை ஆரவாரமாக செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த திருமணத்தில் இவரது, 126 பேரக்குழந்தைகளும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் 28 மனைவிகளும், மணமகனையும் புது மணப்பெண்ணையும் உற்சாகமாக வரவேற்கின்றனர்.

இந்த திருமண வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் தைரியமான மனிதர். 37வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருமண வீடியோ தற்போது சமுகவலைதளத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *