டெக் உலகின் ஜாம்பவான் சுந்தர் பிச்சை…

டெக் உலகின் ஜாம்பவான்களில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்திய சுந்தர் பிச்சையின் பிறந்த தினம் இன்று. மதுரையில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. அவரது குடும்பம் சிறு வயதிலேயே சென்னை அசோக் நகர் பகுதியில் குடி புகுந்தது. நண்பர்கள் மத்தியிலும் மிகவும் அளவாகவே பேசும் கூச்ச சுபாவம் கொண்ட சுந்தருக்கு ஆரம்ப காலத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவு இருந்ததாம்.

குடும்பத்திற்காக வருமானம் ஈட்ட வேண்டிய சூழ்நிலை இருந்ததால் கிரிக்கெட் கனவுகளை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார் சுந்தர் பிச்சை. வகுப்பில் சுமாராகவே படித்தாராம் சுந்தர் பிச்சை. ஆனால் எண்களை மனப்பாடம் செய்தல், அறிவியல் வினாடி வினா புதிர்களுக்கு விடைகாணுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாராம். சின்ன வயதில் முதன்முதலாக வீட்டில் டெலிபோன் வாங்கிய போது தனது உறவினர்களின் செல்போன் நம்பர்களையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தாராம்.

பிளஸ் டூ முடித்த பிறகுதான் தான் ஐஐடியில் படிக்கப் போகிறேன் என்று விண்ணப்பித்தார். நண்பர்கள் அவரை ஏளனமாக பார்க்க தன் விடாமுயற்சியால் ஐஐடி கரக்பூரில் உலோகவியல் படிப்பதற்கு சீட் பெற்றார். கல்லூரியில் பலருடனும் சகஜமாக பேச அப்போதுதான் ஆரம்பித்தார். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னைத் தானே மாற்றிக்கொண்டார்.

ஒருமுறை கல்லூரி பாடத்தில் சீ
குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததற்காக மிகவும் வருத்தப்பட்ட அவர், அதை சரி செய்வதற்காக தீவிரமாக என்று தன்னைத் தானே மேம்படுத்தி கொண்டார்.

ஐஐடி கரக்பூரில் படித்துக் கொண்டிருக்கும் போதே அஞ்சலியை சந்தித்தார். இருவரும் இருவரும் பிற்காலத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திய சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து அழைப்பு வந்தது. இங்கு வந்து படியுங்கள் உங்களுக்கான செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என பல்கலைக்கழகம் அறிவித்தது. அமெரிக்கா செல்வதற்காக பணம் இல்லாத சூழலில் கடன் வாங்கி அமெரிக்கா சென்றார். அமெரிக்கா சென்ற பின்பும் அவருக்கு படிப்பின் மீதான ஆர்வம் துளியும் குறையவில்லை. நிறைய படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வளர்ந்தது. தொடர்ந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார். அவர் படிக்கும் காலத்தில் வீட்டுக்கு டெலிபோன் செய்வது கூட முடியாத காரியமாக இருந்தது கல்லூரி அளிக்கும் உதவித் தொகை சாப்பாட்டிற்கும் பிற தேவைகளுக்கும் சரியாக இருந்த நிலையில் எப்போதாவதுதான் வீட்டிற்கு அழைத்து பேசுவாராம்.

குடும்பத்திற்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற நிர்பந்தம் இதற்காகவே மெக்கின்சி என்றும் கம்பெனியில் சில காலம் வேலை பார்த்தார். பிறகு தனது மனைவி அஞ்சலியின் ஆலோசனையின் பேரில் 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார் சுந்தர் பிச்சை.

அந்த காலகட்டத்தில் மைக்ரோசாப்டின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் இவை இரண்டும் முக்கியமானதாக கருதப்பட்டது அப்போதுதான் சர்ச் என்ஜின் வைத்திருக்கும் நாம் ஏன் பிரவுசர் வெளியிடக்கூடாது என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. இதை சுந்தர் பிச்சை  கூகுள் நிறுவனம் தனது ஐடியாவை சொன்னபோது  நிராகரிக்கப்பட்டார். ஆனாலும் சுந்தர் பிச்சை அந்த சிந்தனையை கைவிடவில்லை.  தயாரிப்பதற்கான முழுமையான வழிகளை உருவாக்கி அதில் அவர் வெற்றி கண்டார். பின்னர் கூகுள் குரோம் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது. கூகுள் மேப், கூகுள் ட்ரைவ் என பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தினார் தமிழகத்தின் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவராக இருந்தார். இவரது கண்டுபிடிப்புகளால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது  பின்னர் பல்வேறு கம்பெனிகள் அதிக சம்பளத்துடன் சுந்தர் பிச்சையை தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அணுகின. ஆனால் அவற்றையெல்லாம் சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார். எனக்கு கூகுள் நிறுவனம் தான் வாய்ப்பளித்தது நான் அதில் தான் பணிபுரிவேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

அப்போதுதான் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான துணை நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவர கூகுள் நிறுவனத்தை உருவாக்கியவர்களான லாரி பேஜ், செர்ஜி பிரின் ‘ஆல்பபெட்’ என்னும் நிறுவனத்தை உருவாக்க தீவிரமாக முயன்று வந்தனர். இந்நிலையில் தனது வளர்ந்துவரும் கூகுள் நிறுவனத்தை திறமையுள்ள மற்றும் அதே நேரத்தில் நம்பகத்தன்மையுள்ள ஒருவரிடம் ஒப்படைக்க அவர்கள் விரும்பினர்.

2015ஆம் ஆண்டு கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை செயல்படுவார் என லாரி பேஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்போதுதான் சுந்தர் பிச்சை எந்த கல்லூரியில் பயின்றவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பதில் ஊடகங்கள் விருப்பம் காட்ட ஆரம்பித்தன. தற்பொழுது ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

“உங்களுக்கு பிடித்ததை மட்டுமே செய்யுங்கள் மற்றவர்களுக்காக ஒருபோதும் உங்கள் செயல்களை மாற்றாதீர்கள் அதுதான் எதிர்கால வெற்றிக்கான வழியும்” என்பது தான் சுந்தர் பிச்சையின் தாரக மந்திரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *