நானும் ரௌடி தான் என தறிகெட்டு சுற்றியவருக்கு மாவுக்கட்டு!!

சென்னை பெரம்பூரில் கையில் கத்தியுடன் கடைவீதியில் மிரட்டி பணம் பறித்த தோடு ஒருவரை வெட்டி ரகளையில் ஈடுபட்ட ரவுடி போலீசுக்கு பயந்து ஓடும்போது வழுக்கி விழுந்ததில் வலது கை முறிந்தது.

சென்னையை சேர்ந்தவன் ரவுடி மகேஷ். இவர் தனது கூட்டாளிகளான சார்லஸ், கர்ணன், கோகுலகிருஷ்ணன் ஆகியோருடன் பெரம்பூர் நகரில் உள்ள மளிகை கடை ஒன்றிற்கு சென்று மாமுல் கேட்டு மிரட்டியுள்ளனர். கடைக்காரர் பயந்து போய் இருநூறு ரூபாய் கொடுத்ததும் அங்கிருந்து சென்ற அவன் அருகில் உள்ள இறைச்சிக் கடைக்கு சென்று மாமுல் கேட்டு குடிபோதையில் அங்கிருந்த கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்தான். அடுத்ததாக வெளியில் வந்தவன் ஆட்டோவில் உப்பு லோடு ஏற்றிக் கொண்டிருந்த ஓட்டுனரை கத்தியால் வெட்டி, அதோடு அந்த லோடு ஆட்டோவில் கண்ணாடியையும் உடைத்து நாங்கள் தான் இந்த ஏரியாவின் ரவுடி என்று சத்தமிட்டுபடியே சென்றான். ஏற்கனவே இரண்டு ரூபாய் கொடுத்தால் மளிகை கடை காரரிடம் மீண்டும் சென்று 5 ஆயிரம் ரூபாயை கேட்டு கையை நீட்ட அவர் கொடுக்க மறுத்ததால் அவரை அச்சுறுத்தும் வகையில் கடையில் இருந்த தக்காளி கூடையை விசிறி அடித்து பொருள்களை இழுத்துப் போட்டு உடைத்து உள்ளது அந்த ரவுடி கும்பல். அக்கம்பக்கத்தினர் வந்து ரவுடி கும்பலிடம் சண்டை போட அங்கிருந்து ஒவ்வொருவராக தப்பித்தனர். அடுத்த கடைக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி பிச்சை எடுக்க சென்றுவிட்டனர் அந்த ரவுடி கும்பல்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் இந்த ரவுடி கும்பலை விரட்டினர். கையில் கத்தியுடன் தாவி குதித்து தப்பி ஓடிய ரவுடி மகேஷ் திடீரென வழுக்கி விழுந்ததால் அவரது வலது கை எலும்பு முறிந்து போனது. இதனால் வலியால் துடித்த அவனை மருத்துவமனைக்கு சென்று மாவுக்கட்டு போட்டு காவல்துறையினர் அழைத்து வந்துள்ளனர். பின்னர் அவனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அட்டகாசம் செய்யும் ரவுடிகள் மீது சிறப்பான கவனிப்புடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *