கொரோனா நோயாளிகளை கவனிக்க ரோபோ…

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதற்காக உலக நாடுகள் கடுமையான தடுப்பு நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் ஹாங்காங்கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கவனிப்பதற்காக புதிய வகை ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்,

இந்த ரோபோவுக்கு ‘கிரேஸ்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. செவிலியரைப் போல நீல நிற உடை இந்த ரோபோவுக்கு அணிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ரோபோவுக்கு ஆசிய பிராந்திய மொழி மற்றும் அம்சங்கள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன.

இந்த ரோபோ தனது மார்புப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதோடு, செயற்கை நுண்ணறிவுத் திறன் (ஏஐ) மூலம் நோயாளிகளின் பிரச்னைகளை எளிதில் கண்டறிகிறது.

குறிப்பாக, முதியவர்கள்,கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப் பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் முன்களப் பணியாளர்களின் பணிச்சுமை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *