இப்போ நான் சிங்கிள்… நடிகை வனிதா ட்வீட் !!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். இது அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பீட்டர் பாலின் மனைவிக்கும் வனிதாவிற்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்றது. பின்னர் சில வாரங்களிலேயே பீட்டர் பால் குடிகாரர் என்று கூறி அவரிடம் இருந்து பிரிந்து விட்டார். இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

இதனிடையே, நடிகை வனிதா, கொல்கத்தாவை சேர்ந்த பைலட் ஒருவரை அண்மையில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில், இதுகுறித்து நடிகை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில், “உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாக தான் இருக்கிறேன். இதனால் எந்தவொரு வதந்தியையும் பரப்பவோ, நம்பவோ வேண்டாம்” எனக்கூறி தனது திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *