அடுத்த 3 வருஷத்துக்கு நேரமில்லை… அதிரடி காட்டும் தனுஷ்!

தனது இயக்குனர் கனவை மூன்று வருடங்களுக்கு தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இளம் வயதில் நடிகராக அறிமுகமாகி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கடந்து ‘ப… பாண்டி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் தனுஷ். இனிமேல் அவ்வப்போது படங்கள் இயக்குவேன் என்று அறிவித்தவர், இரு வருடங்களுக்கு முன் நாகார்ஜுன், எஸ்.ஜே.சூர்யா, அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவாதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கினார். பிறகு அத்திரைப்படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு, மூன்று வருடங்களுக்கு அது பற்றி யோசிக்கப் போவதில்லை என்று பதிலளித்துள்ளார். காரணம் கேட்கும் போது, தனது மனதுக்கு நெருக்கமான பல கதைகள் தன்னிடம் இருப்பதாகவும், அதேநேரம், கடவுளின் அருளால் கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் போன்ற திறமைசாலிகளின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், மேலும் பல புதிய இளம் இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் மிகவும் பிசியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *