பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 14-ஆவது முறையாக அரையிறுதியில் நடால்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரஞ்ச் ஓபன் “கிராண்ட் ஸ்லாம்” போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் 13 முறை சாம்பியனான ரபேல் நடால் 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி 14-வது முறையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

பிரெஞ்ச் ஓபனில் நடால் பதிவு செய்த 105-வது வெற்றி இதுவாகும். இதனைத் தொடர்ந்து அடுத்த அரையிறுதி போட்டியில் ரபேல் நடால் – ஜோகோவிச் ஆகியோர் மோதவுள்ளனர். ஜோகாவிச் – நடால் ஆகியோர் 58 ஆவது முறையாக நேருக்கு நேர் மோதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *