ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ரசிகர்கள்… களத்தில் இறங்கிய சூர்யா

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவித்த தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் 250 பேருக்கு நடிகர் சூர்யா நேரடியாக நிதியுதவி வழங்கியுள்ளார்.

தனது அகரம் ஃபவுண்டேஷன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளித்து உதவிக்கரம் நீட்டி வரும் சூர்யா, தனது படங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் பொது சமூகத்தினருக்கும் பல்வேறு உதவிகளை செய்கிறார். கடந்த ஆண்டு ’சூரரைப் போற்று’ வெளியீட்டுத் தொகையில் 5 கோடி ரூபாயை பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் கொரோனா களத்தில் முன்னின்று பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் பகிர்ந்தளித்தார். அந்த வகையில் இந்த வருடம் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 250 ரசிகர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் என, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தியுள்ளார். இதனை, சூர்யாவின் ‘2டி’ என்டெர்டைன்மெண்ட் நிறுவனம் வாயிலாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடிகர்களின் ரசிகர்கள்தான், நடிகர்கள் சார்பில் செலவு செய்து உணவு, மளிகைப்பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஆனால், சூர்யாவே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். நடிகர் சூர்யாவின் இந்த செயல் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *