“வலிமை படத்துல இருக்கீங்களா அண்ணா?”.. – பிரபல நடிகரின் வைரல் பதில்!

போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் தல அஜித்குமார் – எச்.வினோத் இணையும் இரண்டாவது திரைப்படம் வலிமை. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற நேர் கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் தொடர்பான அப்டேட்டுகள் கொரோனா குறைந்த பின்னர் ஒவ்வொன்றாக வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் தல அஜித்துடன் பிரபல நகைச்சுவை நடிகர் மீண்டும் இணைந்திருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு தனது ட்விட்டரில் நவரசா ஆந்தாலஜி படத்தின் அரவிந்த் சாமி மற்றும் தான் தோன்றும் படக் காட்சிகளை புகைப்படமாக பதிவிட்டிருந்தார்.  அப்போது ரசிகர் ஒருவர் யோகிபாபுவிடம் “அண்ணா.. வலிமை படத்தில் நீங்களும் பணிபுரிந்தீர்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு யோகிபாபு, “ஆமா ப்பா” என பதில் சொல்லியிருக்கிறார்.

முன்னதாக வீரம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் ஆகிய மூன்று படங்களிலும் தல அஜித்துடன் காமெடியில் கலக்கிய யோகிபாபு மண்டேலா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றது.

‘குக் வித் கோமாளி’ புகழ் தலயுடன் வலிமையில் நடிக்கிறார் என்ற செய்தியை தொடர்ந்து யோகி பாபுவும் இணைந்திருப்பதால் வலிமையில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *