தமிழகத்தில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு…தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகள்!!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மார்க் கடைகளை திறக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கவும், மேலும் பல தளர்வுகளை வழங்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு இருக்கின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *