தனியார் மருத்துவமனைகளை அரசே எடுத்து நடத்த, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.!!

சென்னையை சார்ந்த வழக்கறிஞர் டி.நாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகளவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அப்பாவி மக்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனியார் மருத்துவமனையில் வசூல் வேட்டை மட்டுமே நடந்து வருகிறது. பல தனியார் மருத்துவமனைகள் பல காரணங்களை கூறி நோயாளிகளிடம் பணம் பறித்து வருகிறது. நாளொன்றுக்கு மக்களிடம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 இலட்சம் வரை தனியார் மருத்துவமனைகள் ஒரு நபருக்கு வசூல் செய்கிறது.

அரசு மருத்துவமனையில் படுக்கை நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் நிலையை கருத்தில் கொண்டு அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் ” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *