புதிய படத்தில் நடிக்க தயாரான சூப்பர் ஸ்டார்…!!!

’அண்ணாத்த’ திரைப்படத்தை தொடர்ந்து, புதிய திரைப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

’பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், துல்கர் சல்மான் நடித்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கி பாராட்டை பெற்ற தேசிங் பெரியசாமி ஆகியோரிடம் ரஜினிகாந்த் கதை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பின.

இதில், யாருடைய கதையை ரஜினிகாந்த் தேர்ந்தெடுப்பார் என விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *